தங்கச்சி பாப்பா
3 வருடங்களுக்கு முன்...
"எனக்கு இந்த தங்கச்சி பாப்பா வேணாம் - எனக்கு பிடிக்கல" - தன் வீட்டில் புதிதாக பிறந்த தங்கச்சி பாப்பாவை பாத்துவிட்டு அழுது கொண்டே room-க்குல் ஓடினான் 3 வயது அப்பு..அம்மா தன்னிடம் மட்டும் செலுத்திய அன்பு இப்பொது தங்கச்சி பாப்பாவுக்கும் செலுத்துகிறாள் என்ற possessiveness அவனுக்கு..
இன்று..
"பாபு, என் தங்கச்சி பாப்பாவுக்கும் ஒரு chocolate குடுடா" - என்றான் தன் பிறந்த நாளுக்காக அப்புவுக்கு chocolate கொடுத்து கொண்டு இருந்த பாபு-விடம்.."இன்னைக்கு தங்கச்சி பாப்பா வந்துடும்னு எங்க அம்மா சொன்னாங்கடா - அவளுக்கு இந்த chocolate ரொம்ப புடிக்கும்டா பாபு." "இந்தாடா அப்பு, தங்கச்சி பாப்பாவுக்கும் குடுடா" என்று இரண்டு chocolate-களை கொடுத்தான் பாபு.."அப்பு - உனக்கு தங்கச்சி பாப்பானா ரொம்ப புடிக்குமா?" "ஆமாட பாபு.." எவ்வளவு புடிக்கும்?" "ரொம்ப" என்று தன் கைகளை இரு பக்கமும் நீட்டினான்.
2 வருடத்துக்கு முன்..
"அச்சசோ, அழாதே மா.." என்று அழுதுகொண்டு இருந்த பாப்பாவிடம் தன் அம்மா கூறிக்கொண்டு இருக்கிறதை பாத்து கதவடியில் ஒலிந்து கொண்டு சிரித்தான் அப்பு - கையில் ஒரு கூர் pencil-உடன்..
இன்று..
"பாபு, நாளைக்கு leave-டா..நாளைக்கு full-ஆ நான் தங்கச்சி பாப்பாவோட தான் விளையாட போரேன்டா". "அப்பு - நானும் வாரன்டா..எனக்கும் உன் தங்கச்சி பாப்பாவை ரொம்ப புடிக்கும்டா". "பாபு இல்லடா, எங்க அப்பா என்னையும் தங்கச்சி பாப்பவையும் எங்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாருடா..அதனால நீ வீட்டுக்கு வரவேணாம்டா" என்றான் அப்பு, தன் தங்கச்சி பாப்பா தன்னுடன் மட்டும் தான் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில்..
இரண்டு வாரத்துக்கு முன்..
"அம்மா எனக்கு ரொம்ப வலிக்குதுமா" என்றான் அப்பு அழுது கொண்டு.."இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், மரத்துல ஏராதேனு, இப்பொ பாத்திய, கீழே விழுந்து, உன் காலை உடைச்சுகிட்டே" என்றாள் அம்மா, படுத்துக் கொண்டு இருந்த அப்புவுக்கு balm தடவி கொண்டே..பக்கத்தில் தங்கச்சி பாப்பா அப்புவை பாத்து கொண்டு இருந்தாள்.."சரி - நான் இப்போ போய் உனக்கு சாப்பிடரத்துக்கு எதாவுது எடுத்திட்டு வாரேன்டா, நீ படுத்துகோ கண்ணா" என்று சொல்லியவாரே அறையை விட்டு சென்றாள் அம்மா. அவன் கண்கள் மூடும் போது, தன் கால்களை யாரோ தடவுவது போல இருந்தது...விழித்தான் அப்பு..அவன் கால்களை அழுது கொண்டே தடவி கொண்டு இருந்தால் தான் எப்பொதும் வெருத்த தங்கச்சி பாப்பா..அவன் கண்களை மீண்டும் மூடினான்..அவன் மீண்டும் அழுதான் - ஆனால் வலியில் அல்ல..
இன்று
"வீடு வந்துடுசுடா, நான் இறங்கிக்கிறேன்..bye டா பாபு" என்று van-ஐ விட்டு கீழே இறங்கி தன் வீட்டுக்குள் ஓடினான்.."பாப்பா", "தங்கச்சி பாப்பா" என்று வீட்டுக்குள் தேடினான். "அம்மா, தங்கச்சி பாப்பா வந்துட்டாளா மா" என்றான் அம்மாவிடம்..பதில் வரவில்லை...தன் school bag-ஐ கலட்டிவிட்டு, வாசல்லுக்கு ஓடி gate அருகில் சென்றான்..தன் pocket-இல் இருக்கும் chocolate-ஐ பார்த்தான்..தன் தங்கச்சி பாப்பாவுக்காக காத்து நின்றான்..
அப்பு வாசலில் காத்து கிடக்க - வீட்டின் பூஜை அறையில் - தங்கச்சி பாப்பா சிரித்து கொண்டு நின்றாள் - படமாக.